தர்பார் படத்தின் முதல் பாடல் நவம்பர் 27-ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சர்கார்' படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது மட்டுமின்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து இன்று படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் முதல் பாடல் நவம்பர் 27-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் இசையமைப்பாளர் அனிருத், சும்மா கிழி என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருப்பதாகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment