Breaking

Wednesday, February 12, 2020

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ஒரு குட்டிக் கத பாட்டு - யாரு பாடுனதுனு GUESS பண்ணுங்க பார்க்கலாம்..

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

    அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து ஒரு குட்டிக் கத பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கத்தி' படத்துக்கு தளபதி விஜய் - அனிருத் இணைந்துள்ளதால் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த பாடலை விஜய் பாடியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அவர் 'பிகில்' பாடத்தில் பாடிய வெறித்தனம் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment